நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்பு !!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்நகரம் கிராமத்தில் இருந்து உளவு சுந்தரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ், ராஜ் ஆகிய 4 மீனவர்களும் நேற்று கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் காற்றின் வேகம் அதிகரித்ததால் மீனவர்கள் கடலில் மாயமாகினர். இதனால் அச்சம் அடைந்த அவரது குடும்பத்தினர் கடலோர காவல்படையினருக்கு புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் சக மீனவர்கள் நேற்று இரவு முதல் அவர்களை தேடுதல் பணியில் இறங்கினர். குறிப்பாக 14 நாட்டுப்படகில் 61 மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கடலுக்கு சென்றனர்.

அப்போது மீனவர்கள் கிடைக்காமல் போனதால் வீடுதிரும்பிய அவர்கள் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் இறங்கினர். இந்த சூழலில் 4 மீனவர்களும் கடலில் மிதந்து தத்தளித்து இருப்பதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மீட்டனர்.

பின்னர் அவர்களை கரைக்கு கொண்டுவந்து முதற்கட்ட சிகிச்சை அளித்து பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மேலும், 4 மீனவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 மீனவர்களும் சுமார் 20 மணி நேரம் தத்தளித்து இருந்ததாகவும் இவர்களின் படகு பழுது ஆனதே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.