மலைபோல் குவிந்த நுரை: தென்பெண்ணை ஆற்றால் அதிர்ச்சியில் மக்கள்!!

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளால் வெள்ளை நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஓசூர் அடுத்த கெளவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 985 கன அடி நீர் இருந்த நிலையில் இன்று 1033 கன அடி நீர் ஆர்பறித்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி அளவில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தற்போது கெளவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு ஆன 44.28 அடியில் நிரம்பும் தருவாயில் 41. 49 அடி தண்ணீர் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறப்படும் கழிவுநீர் மற்றும் பெங்களூர் அணையின் கழிவுநீர் உள்ளிட்டவை தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக கலப்பதால் பல அடி உயரத்திற்கு ரசாயன நுரை பொங்கிதால் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆண்டுதோறும் தொடர்கதையாகி வரும் ரசாயன கழிவு அச்சுறுத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *