500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்பு: 2 பேர் கைது !!

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட்டுவதற்கு தயாராக உள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

இத்தகவலை அறிந்த Dr.ஜெயந்த் முரளி, இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு
காவல்துறை தலைவர் திரு.தினகரன், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கதிரவன் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் திரு.பிரபாகரன், திரு.பாண்டிய ராஜ், திரு.சுந்தர் ஆகியோர்கள் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலிசார் சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுமார் 25 கோடி சிலையை வியாபாரம் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் சிலை கடத்தல் காரர்களை நம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் 1.சென்னை வெள்ளவேடு, புதுகாலணியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் (எ) பாலா, வயது 46, 2. சென்னை, புதுசத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜ் என்பவரிடம் சிலையை மீட்டனர்.

பின்பு சிலையை கைப்பற்றி காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவளகத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்ற எண்.13/2022 என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் புலண்விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் மேற்கண்ட நபர்களை
விசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்து நேற்று நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தினர். இதனிடையே சிலையானது பச்சைகல்லிங்கத்தினை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வருடன் சுமார் 29 செ.மீ உயரம் 18 செ.மீ அகலம் பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் பச்சைகலர்லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது.

மேலும், சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளதால் இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *