மக்களே உஷார்!! அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை..

வட தமிழக கடலோரம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 20- ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *