அடக்கொடுமையே..! விவசாயிகள் இல்லாமல் விவசாய குறைதீர்க்கும் கூட்டமா..?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விவசாயிகள் இல்லாமல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டார விவசாயிகளுக்கு மாதம் தோறும் அனைத்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் விவசாய குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஓராண்டிற்கு முன்பு முதல் தற்போது வரை வந்தவாசி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த இடம் வந்தவாசி அடுத்த 3 கி,மீட்டர் தொலைவில் உள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலந்துக்கொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக போக்குவரத்து வசதி இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கலந்துகொள்ளாமல் போவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்.

எனவே குறைத்தீர்க்கும் கூட்டம் எப்போதும் போல வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *