வேன் மரத்தில் மோதி கோர விபத்து: சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி!!

விபத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் வேன் மோதியதில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுவந்தாலும் நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

கண்டமனூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் தனது உறவினர்களுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார். செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *