நூல் விலை உயர்வு: கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் !!
நூல் விலையை கட்டுப்படுத்த கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்து வருவதால் நூல் விலையை கட்டுப்படுத்த கோரி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 400 உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 50% முதல் 100% வரையில் நூல்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து வரும் ஆர்டர்களை ஏற்றுமதி செய்ய முடியாத அவலநிலை உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க வேண்டும் என்றும் இதற்காக அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளனர். மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவில் நூல்களின் விலை குறையும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்புகின்றனர்.