நீட் தேர்வு: மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு !!

நீட் தேர்விவுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரக்கூடிய ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆன்லைன் வழியில் மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாணவர்களுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு மே-15 ஆம் தேதி வரையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் 2-வது முறையாக மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வரக்கூடிய 20-ஆம் தேதி இரவு 9 மணி வரையில் தேசிய முகவை இணையதளம் வழியாக மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தேர்விற்கு கட்டணம் செலுத்துவது அன்று இரவே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து இருக்கும் நிலையில் மேலும் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்ய வசதியாக இரண்டாவது முறையாக காலநீட்டிப்பு என்பது செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு தேதியை பொருத்தவரையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் முதலில் அறிவித்தபடி ஜூலை 17-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *