அதிர்ச்சி..! மாநகர ஓட்டுனர் மீது காவலர் சராமாரியாக தாக்குதல்..
சாலையில் சென்ற நபர் ஒருவர் கீழே எச்சில் துப்பிய போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தன்னை நோக்கி தான் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நபரை சரமாரியாக அடித்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே சாலையில் சென்ற ஒரு நபர் கீழே எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. பொதுமக்கள் காயம் பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் காயமடைந்த நபர் பேருந்து நடத்துனர் பாலச்சந்திரன் என்றும், காவலர் லூயிஸ் என்பதும் தெரியவந்தது. 2 பேரிடமும் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.