ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! வந்துவிட்டது ’பேனிக் பட்டன்’…

பட்டன்

சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்களின் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேனிக் பட்டன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக ஜிபிஎஸ் கருவி, பேனிக் பட்டன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 500 மாநகர பேருந்துகளில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது திருட்டுச் செயல்கள், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுவதை தடுக்க முடியும் என்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதனிடையே சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் அனைத்து செயல்களும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாகக் கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதாவது நடந்திருந்தால் தகவல் மையம் கிளவுட் உடன் இணையும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகரில் உள்ள 2500 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக சுமார் 22 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *