கட்டாயம் வரவேண்டும்..? – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்வி கல்லூரிகளும் திறக்கப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்தது. அந்த வகையில் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று அதற்கான பாடகியான அட்டவணையும் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
இதனிடையே கடந்த வாரம் முதல் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு 1 முதல் 9-ஆம் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
அதே போல் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் இறுதி வாரத்தில் தேர்வுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 1 முதல் 9-ஆம் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் வருகின்ற 20-ம் தேதி வரையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க கட்டாயம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.