2000 ஆண்டுகள் பழமையான வைகுண்டவாச பெருமாள் கோவில்: குடமுழுக்கு விழா கோலாகலம் !!

திருவெண்ணெய் நல்லூரில் உள்ள பழமையான வைகுண்ட வாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூரில் 2000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் பணிகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில் குடமுழுக்கு விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேசர் கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

யாகசாலையில் வைத்த பூஜைசெய்யப்பட்ட புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க விமானகலசங்களில் ஊற்றி குடமுழக்கு விழா நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் நலன் கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *