இலங்கைக்கு நிவாரண பொருட்கள்; எப்போது அனுப்படும் ?

இலங்கையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கடும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. குறிப்பாக இலங்கையில் முக்கிய நகரமான கொழும்பில் மட்டும் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு தொடர்வதால் மின்சாரத்தை நம்பி இருக்கும் மக்களின் வாழ்க்கை முடிங்கியது.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தவர்கள் மீது மகேந்திர ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கியதால் வன்முறை வெடித்தது. இந்த சூழலில் இலங்கை நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவைகளை வழங்கிவந்துள்ளது.

இதற்கிடையில் முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் அனுப்பி வைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த வகையில் இலங்கை மக்களுக்கு நிதி வழங்க பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பேக்கிங் செய்யும் பணி பைகளில் ‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்’ மு.க.ஸ்டாலின் என்ற வாசம் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. இத்தனிடையே பேக்கிங் செய்யும் பொருட்கள் வருகின்ற மே 22ஆம் தேதிக்குப் பிறகு இலங்கைக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *