பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..!

தஞ்சையில் 2 குடோன்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் கிராமத்தில் அதிகளவில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பீரவின் என்பருக்கு சொந்தமாக 2 குடோன்களில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டி 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வித உரிமமும் இல்லாமல் இரண்டு குடோன்கள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த அதிகாரிகள் குடோன்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்களும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *