ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு: வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!!

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 தேதி மேட்டூர் அணையை திறக்கலாம் என்று மூத்த வேளாண் துறையினர் அடங்கிய குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்ட மூத்த வேளாண்துறை வல்லுனர் குழு ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய காலம் சிறப்பாக சாகுபடி செய்யும் பயிர்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை தமிழக அரசுக்கு வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் 17வது ஆண்டாக வல்லுனர் குழு சார்பில் பயிர் சாகுபடியும் நீர்வள திட்டம் என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு வேளாண்மைத்துறை, நீர்ப்பாசனத்துறை மற்றும் பொதுப்பணி துறைக்கு புத்தகம் வழங்கும் பணிகளை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணை திறப்பு மற்றும் மூடும் காலத்தை 15 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும் என வேளாண் வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரை கர்நாடக மாநிலத்தில் இருந்து பெற்று தர அந்த குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *