கழிவறை இல்லாத காதல் வாழ்க்கை: விபரீதத்தில் முடிந்த சோகம்!!

கடலூர் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டில் கழிவறை இல்லை என்பதால் திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த கார்த்திகேயனும் அரிசிபெரியாங்குப்பம் சேர்ந்த ரம்யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த மாதம் ஆறாம் தேதி இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு கார்த்தியின் வீட்டிற்கு சென்ற ரம்யாவிற்கு அங்கு கழிவறை இல்லை என்பது பெரும் குறையாக இருந்து வந்துள்ளது. கழிவறை இருக்கும் வீடு பார்க்குமாறு கார்த்திகேயனிடம் ரம்யா கேட்டு வந்ததால் புதுமண தம்பதியினர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரம்யா கடந்த 6ம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துடிதுடித்த நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரம்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரம்யா மரணம் குறித்து அவர்களுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் திருப்பாதிப்புலியூர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *