கவனிக்க முடியவில்லை!! பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்ற கொடூர தாய்..
திருவள்ளூர் மாவட்டம் கடுப்பூர் பகுதியில் உள்ள சத்திரை பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா- நம்பிராஜன் தம்பதியினர். இவர்களுக்கு 3-வதாக திருப்பெரும்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை சந்திரா இந்திரா என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் போலீஸாருக்கு தெரிந்தவுடன் இந்திராவிடம் இருந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் தாயான சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது கண வர் கூலி வேலை செய்து வருவதால்தான் அங்குள்ள ஊராட்சியி பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதாக கூறினர். ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் இக்குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த சூழலில் குடும்ப வறுமை காரணமாக இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க முடியாத பட்சத்தில் மூன்றாவது குழந்தையை விற்று குடும்பத்தை நடத்தலாம்என திட்டமிட்டது தெரியவந்துள்ளது .மேலும், சந்திராவை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.