குப்பை கிடங்கில் தீ விபத்து: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!!

நகராட்சிக்கு சொந்தமான குப்பைகிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட புகையினால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை திருக்கட்டளை சாலையில் உள்ள 13.33 ஏக்கரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைகிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு புகைமண்டலமாக மாறியது. ஏற்கனவே சுகாதார சீர்கேட்டினால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் திருக்கட்டளை, தேத்தாம் பட்டி, இன்னாம் பட்டி, ஈட்டித் தெரு, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுக் கூட விடமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே ஆவேசம் அடைந்த திருக்கட்டளை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் புத்துக்கோட்டை ஆலங்குடி சாலையில் அசோக் நகர் என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட குப்பை கிடங்கை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *