அதிர்ச்சி..! பிளஸ் டூ பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு..
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்தாண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் தமிழகமெங்கும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரம் முதல் பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கு மட்டும் சுமார் 8 லட்சத்து 37, 317 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில தேர்வில் மூன்று பேர் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என்று 3 பேர் ஒழுங்கீன செயல்களில் ஈடுப்பட்டு பிடிப்பட்டுள்ளனர்.