புயல் எச்சரிக்கை: 2-ம் எண் கூண்டு ஏற்றம் !!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற உள்ளது. இப்புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுமார் 900 கி.மீ நிலைக்கொண்டுள்ளது. குறிப்பாக இப்புயல் மணிக்கு 13 மணி கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் வரும் 10- ஆம் தேதியில் வடக்கு ஆந்திரா சென்று கரையை ஒதுங்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த சூழலில் இன்று புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 2- ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *