அடக்கடவுளே..! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகள்..

ரசாயன கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா என ஆய்வு செய்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டில் சீசன் தொடங்கிய போது சரியான விளைச்சல் இல்லாததால் மாம்பழம் பற்றாக்குறை இருந்தது. பருவம் தவறி காய்த்த மாங்காய் தற்போது சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வராஜ், ராஜேந்திரன், ராஜா மற்றும் கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர். ராஜபாளையத்தில் உள்ள தினசரி சந்தையில் சோதனை ஈடுபட்டனர். மாம்பழ குடோன் ஒன்றை சோதனையிட்ட போது அங்கு ரசாயன பொருட்கள் இருப்பதனை கண்டறிந்து அதனை பயன்படுத்த கூடாது எனக்கூறி அங்குள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்வதற்கு வாகனங்களை தயார் செய்தனர்.

இதற்கு வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்த மற்ற வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்ததால் அதிகாரிகளை கடைக்குள் சிறை வைத்தனர். அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். இப்புகாரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களைத் தாக்க முயற்சித்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் ரசாயன கற்களை பயன்படுத்தி பழுக்கவைப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *