ராபர்ட் கால்டுவெல் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!

திராவிட மொழிகளின் ஒப்புலக்கணம் வகுத்த ஆங்கிலேயர் ராபர்ட் கால்டுவெல் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது

சென்னை காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் சிலைக்கு, அவரது 208 வது பிறந்தநாளை முன்னிட்டு, சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இருந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர் பாபு, தொழில் வளர்ச்சி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்

தென்னிந்திய திருச்சபையின் பரிசாக 1967 ஆம் ஆண்டு கால்டுவெல் சிலை உருவாக்கப்பட்டது. திராவிட மொழி வரலாற்றில் முக்கியமானவர் ராபர்ட் கால்டுவெல். இவர் கடந்த 1814 ஆண்டு மே 7-ம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தவர்.

தனது 24 வயதில், ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ எனும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து அம்மதத்தை உலக மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக கடந்த 1838 ஆண்டு ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்தவர். தமிழ் மொழி குறித்த நீண்ட ஆய்வில் ஈடுபட்டு அவர் உருவாக்கிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூல் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியவர்.

திராவிட மொழிகளின் ஒப்புலக்கணம் வகுத்த ஆங்கிலேயர் ராபர்ட் கால்டுவெல் காக தமிழக அரசால் 1968 ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டு, அவர் படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் இன்றைய தினம் ராபர்ட் கால்ட்வெல்லின் 208 வது பிறந்தநாளை ஒட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *