லாக் அப் கைதி மரணம்: 2 போலீசார் அதிரடி கைது !!

கடந்த மாதம் ஏப்ரல் 18- ஆம் தேதியில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் தீபக் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ், விக்னேஷ் என்ற இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யதனர்.

அதில் இருவர்களிடம் 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி இருப்பதனை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமானதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சூலில் அவருடைய சடலம் சகோதரிடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ் அவுஸ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியதால் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இந்த விகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நேற்று முதல்வர் அறிவித்து இருந்தார். அதோடு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என கூறினார். மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் சூடு பிடிக்க தொடங்கியது.

இதனிடையே எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், விக்னேஷ் மரணம் தொடர்பாக வழக்கை நேற்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *