10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் !!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10,11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.இதனால் நடப்பாண்டிலும் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இதற்கான 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதோடு செய்முறைத்தேர்வுகளும் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தமிழகமெங்கும் நேற்று 12 வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இன்று 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இத்தேர்வுகள் இன்று தொடங்கி 30 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 4, 60,247 மாணவிகள், 4,78,089 மாணவர்கள் என மொத்தம் 9,38,337 பேர் 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதே போல் புதுச்சேரியில் 8, 272 மாணவிகள், 8, 530 மாணவர்கள் என 16, 802 பேர் எழுதுகின்றனர்.

10 வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் 3, 888 மற்றும் புதுச்சேரியில் 48 என மொத்தம் 3, 936 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மேலும், 30, 765 தனித் தேர்வர்கள், 242 சிறைவாசிகளும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *