அமைச்சர்களுக்கு மிரட்டல்: மன்னார்குடி ஜீயரை கைது செய்ய திராவிடர் கழகம் புகார் !!

அமைச்சர்கள் வெளியில் நடமாட முடியாது என மிரட்டல் விடுத்த  மன்னார்குடி ஜீயரை கைது செய்ய திராவிடர் கழகத்தினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அமைச்சர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆகியோருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையிலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் வகையில் பேசிய  மன்னார்குடி ஜீயர் மீது நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி உட்பட தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகின்றனர்.

அதோடு அவரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திராவிட கழக வழக்கறிஞர் துரைஅருண் தலைமையில்  மன்னார்குடி ஜீயர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தருமபுர ஆதீனத்தில் வழக்கமாக நடக்கும் பட்டின பிரவேசத்தை தடுத்தால் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பொதுவெளியில் நடமாட முடியாது என சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார்.

இதற்கு பல்வேறு முற்போக்கு அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் வருகின்ற 8- ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *