ஏலச்சீட்டு நடத்திய பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: பின்னணி என்ன ?

போடியை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமராஜ் – பவுன்தாய் தம்பதியினர். இவர்களுக்கு லோகேஷ் குமார் வினோத்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராமராஜ் உடல்நிலை பாதிப்பால் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். பொறியாளரான மூத்த மகன் லோகேஷ் குமார் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இளைய மகன் வினோத்குமார் தாய்யுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். 55 வயதான பவுன்தாய் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் போடியை சேர்ந்த பிரபு என்பவர் 1 லட்சம் ஏலச்சீட்டு எடுத்துள்ளார். கடந்த நான்கு மாதமாக முறையான தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

இதனால் சில நாட்களுக்கு முன்பு பிரபு வீட்டிற்கு சென்ற பவுன்தாய் பணத்தை உடனடியாக கட்டச் சொல்லி சத்தம் போட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு நேற்று புவன்தாய் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் பவுன்தாய் அலறி சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் போன் செய்து பிரபு தகராறில் ஈடுபடுவது குறித்து கூறியுள்ளார்.

பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உடல் முழுவதும் ரத்த கரையில் பிரபு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பவுன்தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

உடனடியாக போடி நகர காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பவுன்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய பிரபுவை காவல்துறையினர் தேடிய நிலையில் அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலச்சீட்டு விவகாரத்தில் 55 வயது பெண்ணை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *