ஓராண்டில் மட்டும் எத்தனை மின்மாற்றிகள் அமைக்கப்பட்டிருக்கு தெரியுமா?… புள்ளிவிவரத்தை தட்டிவிட்ட செந்தில் பாலாஜி!

கடந்த ஓராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 24,036 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தேவையின் அடிப்படையில் கூடுதலாக மின் மாற்றிகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையில் உள்ள 1,336 பில்லர் பாக்ஸ்களின் உயரம் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் தரையோடு தரையாக உள்ள எஞ்சிய பில்லர் பாக்ஸ்கள் மாற்றித் தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பல இடங்களில் வீடுகளுக்கு மேலாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன, எங்கெங்கெல்லாம் மாற்றப்பட வேண்டுமோ, அவற்றையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *