பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு !!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி என்ற பகுதியில் பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் சுமார் 10-க்கும் அறைகள் உள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் பட்டாசு தயாரிப்பதற்கு தேவையான மூலக்கூறுகளை கலக்கும் பணியில் ஈடுப்பட்டார். அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வின்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்த சாத்தனூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த விக்னேஸ்வரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக 7 முறை வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தது இருப்பது குறிப்பிடத்தக்கது.