15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி அடித்து துன்புறுத்திய நபர் போக்சோவில் கைது!

15 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய நபர் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்தடை சட்டத்தில் கைது செய்யப்படுள்ளார்.

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை,
கொளத்தூர் பகுதியைச்சேர்ந்த கவியரசன், என்பவர் காதலித்து கடந்த ஐந்து மாதம் முன்பு ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொளத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கவியரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், சிறுமி வேலைக்கு செல்லுமாறு கூறி சத்தம்
போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் சிறுமியை அடித்து
துன்புறுத்தியதால். சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து சிறுமி குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்பு
கொண்டு புகார் தெரிவித்ததின் பேரில் குழந்தைகள் நல அலுவலக
உறுப்பினர் ஹேமாவதி இந்த சம்பவம் குறித்து திருமங்கலம்
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ
மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்
பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல்
வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கவியரசன், என்பவரை கைது
செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *