முதன் முறையாக தனியார் ரயில் சேவை… எங்கு தொடங்கப்படுகிறது தெரியுமா?
இந்திய ரயில்வேயின் பாரத் கெளரவ் திட்டம் கீழ் சுற்றுலாவை மேம்படுத்த முதல் முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்படுகிறது
.
பாரத் கெளரவ் வழங்கும் திட்டத்தின் கீழ் தனியார் அரசு பங்களிப்புடன் இயக்கப்படும் முதல் ரயில் சேவையாகும். இச்சேவை கோயமுத்தூரிலிருந்து ஈரோடு,சேலம்,பெங்களூர், மந்த்ராலயம் வழியாக செல்லும். இந்த பயணத்தில் ஒரே கட்டணமாக நான்கு நாட்களுக்கு உணவு மற்றும் ரயில்வே பயணத்திற்குத் தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை,போர்வை, கிருமிநாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள்,சீரடியில் போக்குவரத்து வசதி, வியாழக்கிழமை சாய் தரிசனம்,தரிசனத்திற்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படும்.
இரண்டடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும். தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவின் உணவு வகைகள் தரமாக தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சைவ உணவு பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
இந்த ரயில் பயணிகள் ஏறும் இடமாக கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு சேலம்,பெங்களூர் ஆகியவற்றையாகும். கோயம்புத்தூரை தொடர்ந்து பிற்காலத்தில் சென்னை,மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து ஆன்மீக குடும்ப சுற்றுலா பயணங்களை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.வருங்காலத்தில் காசி,ராமேஸ்வரம்,திருப்பதி,கயா மற்றும் புனிதமான உத்தரகாண்ட் தொடங்கியிருக்கின்றனர். இந்த பயணத்திற்கான முன்பதிவை www.saisadanxpress.com இணையதளம் வாயிலாக பதிந்துக் கொள்ளலாம்.
when train starts feom kovai May 22 or June 22