இனி தான் பிரச்சனையே இருக்கு… டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு சுற்றறிக்கை!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று 19.022022 மாலை 6.00 மணியுடன், அமைதியாக நடந்து முடிந்தது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்தபோது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறை தலைவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் பணி இன்னும் முடியவில்லை. சில பிரச்சினைகள் இனிமேல் தோன்ற வாய்ப்பு உண்டு. எனவே, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பிரச்சினையான பகுதிகள் கண்காணிக்கப்படுதல் வேண்டும். மின்னணு வாக்குப்பதிவுப் பெட்டிகள் (EVM) வாக்கு எண்ணுமிடத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்புதல்வேண்டும். தீவர கண்காணிப்புப் பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாள்களுக்கும் தொடரும்.” என்று கூறப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியதற்கிடையே, சென்னை தேனாம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வார்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களை கைமாற்றி முறைகேடாகவே வாக்களிக்கும் முயற்சிகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபடவே மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…