குறையும் கொரோனா தொற்று… தமிழக சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மாநில அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,41,783. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,80,049 ஆகும். இன்று ஒரே நாளில் 82,272 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், வெறும் 1,252 மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனையை குறைப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் யாருக்கெல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.

சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் வெளிநாட்டுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2% பேர் ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் என்றும், வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அரசு சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…