முதல்வர் வீட்டை முற்றுகையிட ஓடிய ஏபிவிபி… மடக்கிபிடித்து கைது செய்த காவல்துறை!

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயன்றதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், மதம் சார்பான பிரச்சாரங்கள் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் செய்யப்படவில்லை என்றும் மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது எனவும் தெரியவந்தது. இந்த விவகாரத்தை தமிழக பாஜக மட்டும் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது. தற்போது அதற்கு சப்போர்ட்டாக ஏபிவிபி அதாவது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்காங்க.

தஞ்சாவூர் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டாங்க. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோஷம் எழுப்பியதோடு, 30க்கும் மேற்பட்டவங்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டாங்க. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். தடுப்பையும் மீறி அவர்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட ஓடியதால் பரபரப்பு நிலவியது.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட போலீசார், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த நபர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…