80 வகையான பொருட்களுடன் தீயாய் தயாராகும் சென்னை கார்ப்ரேஷன்!

சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்களில் ஆண், பெண் வாக்காளர்களுக்காக தலா 255 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5,284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்தும் 1,368 அமைவிடங்களில் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 1,368 சக்கர நாற்காலிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப உடல் வெப்பநிலை மானி, கைகழுவும் திரவம் 100 மி.லி. மற்றும் 500 மி.லி. முகத்தடுப்பான், மூன்றடுக்கு முகக்கவசங்கள், ஒரு முறை உபயோகப்படுத்தும் கையுறைகள், முழு கவச உடைகள் உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான சட்டமுறை சார்ந்த படிவங்கள், சட்டமுறை சாரா படிவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, அழியாத மை குப்பிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் படிவங்களுக்கான உறைகள் போன்ற 80 வகையான பொருட்கள் 19-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்காக அனுப்பி வைக்க விநியோக மையங்களில் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி டி.ஜி.வைஷ்ணவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள விநியோக மையத்திலிருந்து அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரோனா தொற்று தடுப்பு பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, சாய்தள வசதிகள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…