ஒன்றிய அரசின் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பை எதிர்த்து கி.வீரமணி அறிக்கை

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality – DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டுள்ளது.தற்போது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் D.G.H.S. (Director General of Health Service) அவசர அவசரமாக 8.2.2022 அன்று 100 சதவீதம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் தானே கலந்தாய்வு நடத்துவதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.இந்த ஆணையில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஓர் அரசே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது என்பது பொது சுகாதார அமைப்பிற்கு எதிரான சமூக அநீதியாகும்.பொது சுகாதாரத் துறையை வார்த்து எடுத்துள்ள தமிழ்நாடு மற்றும் கேரளாவின் முன் மாதிரியைப் பின்பற்றுவதை விடுத்து தகுதி, திறமை (மெரிட்) என்ற ஒற்றை மாயபிம்பத்தை வைத்துக் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் ஒன்றிய அரசு புறக்கணிப்பது என்பது பொது சுகாதாரத் துறையின் வீழ்ச்சியிலேயே முடியும்.எனவே ஒன்றிய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், அந்தந்த மாநிலத்திற்கான ஒதுக்கீடும் (Domiciliary reservation) நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.சலோனிகுமாரி என்ற ஒரு பெண்மணி தொடர்ந்த வழக்கைத் தவறாகப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கான இடஒதுக்கீடுத் தொடர்பான வழக்கை பல்லாண்டுகள் தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிய பா.ஜ.க. ஒன்றிய அரசு, உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சினையில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசை விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை (8.2.2022) மேற்கொண்டது எப்படி?எனவே முதல்வர் ஸ்டாலின்  இதில் அவசரமாகக் கவனம் செலுத்தி ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…