ராமஜெயம் கொலை வழக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் திருச்சி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே வந்த போது, மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் உடல் கை, கால்களை கட்டபட்டு, வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையில் திருவளர்சோலை பகுதியில் கிடைத்தது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை எவ்வித தடயமும் சிக்கவில்லை. ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தது யார் என கண்டறியப்படாததால் ராமஜெயத்தின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என்றும், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ராமஜெயம் படுகொலை வழக்கை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்; தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதம், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரிக்கும் என உத்தரவிட்டார். மேலும் வரும் 21-ந் தேதிக்குள் இந்த குழு விசாரணை தொடங்கி 5 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழக அரசு முழு உதவிகளை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…