இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவு – கி. வீரமணி  இரங்கல்

மத்திய பிரதேசத்தில் பிறந்து, மகாராட்டிர மாநிலத்தில் வாழ்ந்த இசைத் துறையில் உலகப் புகழ்பெற்ற இசைக் குயில், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் (வயது 92) அவர்கள், உடல் நலக்குறைவால் மும்பையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் இன்று (6.2.2022) விடியற்காலை காலமானார் என்ற செய்தி – மிகவும் துயரத்திற்குரியதாகும்.

ஹிந்தி, மராத்தியில் பாடத் துவங்கி புகழ் ஏணிக்குச் சென்ற அந்த அம்மையார் தமிழிலும் சிறப்பாகப் பாடியுள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்று.

தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர்.

அவரது இழப்பு நாட்டிற்கும், இசை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், இசை ரசிகர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…