பட்ஜெட் கூட்டத்தொடரை குறித்து அறிக்கை வெளியிட்ட சசிகலா

2020-201-ம் ஆண்டுக்கான பட்ஜெட் [கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.  இதில் 5ஜி அலைகற்றை ஏலம், டிஜிட்டல் கரன்சி ஒப்புதல், ஆத்ம நிர்பர் திட்டம், இ பாஸ்போர்ட் வழங்குவது, 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை,பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி ஒதுக்கீடு போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள 2020 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்களை உற்றுநோக்கும் போது ஒருசில சாதனங்களும் பாதங்களும் நிறைந்த கலவையான நிதி அறிக்கையாக தான் பார்க்க முடிகிறது. 60 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் வரை 5.3 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற வேண்டியுள்ளதாகவும் அதிலும் 1.7 கோடி பெண்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள நினைத்து பார்க்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை என்று அறிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

டிஜிட்டல் கரன்சியால் அடித்தட்டு மக்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று தெரியவில்லை. டிஜிட்டல் பண பரிமாற்றம் பற்றிய விழிப்புணர்வை முதலில் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் ஒன்றுடன் ஒன்று ரெகிஸ்ட்ரேஷன் என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கும் நிலையில் இது எந்த அளவுக்கு சாத்தியம் விடும் என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இதனால் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படும் என்று கருதும் தெரிவிக்கின்றனர். மேலும் ஒன்றிய அரசு எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்து இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…