சீட்டிங் கேஸில் சிக்கிய ஜீவஜோதி… நீதிமன்றம் பிறப்பித்த கெடு!

Jeevajothi

ஓட்டல் சரவணபவன் வழக்கு புகழ் ஜீவஜோதி, அவரது கணவர் தண்டபாணி ஆகியோர் மீதான மோசடி வழக்கில் மூன்று மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென வேதாரண்யம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வேதராசு என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக ஜீவ ஜோதியும் அவரது கணவர் தண்டாயுதபாணியும் 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு , அவர்களது வீட்டை என்னிடம் அடமானமாக வைத்து , வீட்டு பத்திரத்தை கொடுத்து வைத்தனர்.

ஆனால் அடமானம் வைத்த பணத்தை என்னிடம் திருப்பி தரவில்லை. ஆனால் , சில நாட்கள் கழித்து, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தன்னிடம் இருந்த வீட்டு அடமான பத்திரத்தை ஜீவஜோதியும், அவரது புதிய கணவர் தண்டாயுதபாணி மற்றும் உறவினர்கள் அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி வீட்டு அடமான பத்திரத்தை பிடுங்கிச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் காவல் நிலைத்தில் கடந்த 2019 ல் புகார் கொடுத்தேன் . இதனையடுத்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். .ஆனால் இந்த மோசடி வழக்கை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்,வேதரசு தரப்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆர்.முருக பாரதி ஆஜரானார். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும், காவல்துறையினர் மெத்தனப் போக்குடன் செய்படுவதாக வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி நிர்மல் குமார் , இந்த வழக்கில் 3 மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…