கொண்டைக்குள் கோல்டு… சிக்கிய தில்லாலங்கடி பெண்ணின் வீடியோ!

சென்னை விமான நிலையத்தில் போலி கொண்டைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண்ணிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணிடம் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த பெண்ணின் தலைமுடிக்கு மேல் போலியான விக்கை வைத்து அதற்குள் தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெஸ்ட் வடிவில் பாலிதீன் பைகளில் சுற்றப்பட்டிருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த பெண்ணின் ஆடைக்குள் இருந்தும் சில தங்க கட்டிகள், வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 22 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான 525 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…