வீடற்றவர்களுக்கு வீடு… தமிழக அரசுக்கு ஐகோர்ட் கொடுத்த அட்வைஸ்!

வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடு இல்லாத ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதேநேரம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு நிலம் அல்லது வீடு வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக நிலத்தை அடையாளம் காணவேண்டும் என்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.