ஸ்பா என்றாலே விபச்சார நிலையமா? காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!

Chennai high court

ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் ஹேமாஜூவானி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ,சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜுடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளதாகவும்,அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக  தொடர்ந்த வழக்கில் ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 தாம்பரத்தில் உள்ள தங்களது கிளையில், விபச்சாரம் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், பணம் கேட்டு காவல்துறையினர் மிரட்டுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து, காவல்துறையினர் மசாஜ் நிலையங்களை விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பதாகவும், தங்களுடைய  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர,மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது என அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…