மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு நிதித்துறை கூடுதல் தலைமைச் செய்லாளர் கிருஷ்ணன், மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான சென்குப்தா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என் சுவாமி. நபார்டு முதன்மை பொது மேலாளர் வெங்கட கிருஷ்ணர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழை, எளிய மக்கள் விளிம்புநிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும் வங்கிச் சேவைகள் அவர்களுக்குப் பயன்பட வேண்டும் தமிழ்நாடு அரசால் வகுக்சுப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன்
வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் திட்டமிடுகிறது மக்களுக்கு ஓரளவு நிதி உதவி செய்கிறது. கூடுதல் நிதியை அந்த மக்கள் வங்கிகள் மூலமாகப் பெறுகிறார்கள் அந்தத் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.

கடன்களை சும்மாவும் தர முடியாது. தகுதியானவர்களுக்கு கடன்களைக் கொடுப்பதன் மூலமாக வங்கியும் வளரும், மக்களும் வளர்வார்கள். இந்தப் பரஸ்பர நிதி நட்பானது நிலைத்து நீடிப்பது என்பது மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும் என கூறிய முதல்வர், திமுக ஆட்சி என்பது சுயநிதிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும்.

சுய உதவி குழு இயக்கம் தமிழ்நாட்டில் 1999-90 ஆம் ஆண்டில் பிறந்தது.அதனை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்குதனிக்கவனம் செலுத்தி நடத்தினேன். அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அதுதிறம்பட நடத்தப்படவில்லை.

சமூக மறுமலர்ச்சிக்கு குறிப்பாக பெண்களின் உயர்வுக்கு இது மிக மிக முக்கியமான திட்டமாகும். பெண்களின் சமூசு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை, 4.951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள் கடன்பெறுவதற்குத் தங்களின் கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வங்கிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *