மனுஷன் செத்தாலும் சாதி போகமாட்டேங்குதே… நீதிபதி வேதனை!

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை எரிபட்டியில் அமிர்தவல்லி என்பவர் நிலத்திற்கு செல்லும் வழியில் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமனறத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்றும் உத்தரவிட்டார். கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு அரசு, அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…