அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு காரணம் யாரும் சாலை விதிகளை பின்பற்றாமல் இருப்பது தான். விபத்து எண்ணிக்கை குறைக்கும் வகையில், அப்போதை இந்திய பிரதமர் வாஜ்பாய் தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டுவந்தார்.அதேபோல, தமிழகம் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறான பகுதிகளில் மேம்பாலங்கள் அதிக அளவு கட்டப்பட்டுள்ளன.
ஆனாலும் விபத்து எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 1,50,000 பேர் சாலை விபத்துகளால் இறந்துள்ளனர்.
சாலையின் நடுவே தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும், விரைவு பேருந்துகள் நெடுந்தொலைவுகளில் அதிகம் வருவதால் உணவு சாப்பிடவும், தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் டீ கடைகளும், மோட்டல்கள் என்று சொல்லப்படும் உணவகங்களும், அதிக அளவு இயங்கி வருகிறது. இவ்வளவு இருந்தும் விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் “அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காக நிறுத்தும்போது, பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையை அரசு விரைவுப் பேருந்தின் கிளை மேலாளர்கள் மற்றும் கோட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.