குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை

குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்க காரணம், பிறவிலேயே அவர்களுக்கு இதய கோளாறு இருப்பதும் ஒரு காரணம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள காமாட்சி நினைவு மருத்துவமனையில் இதுவரை 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து இலவச சிகிச்சை பெற”பிஞ்சு இதயங்களை குணப்படுத்துவோம்” என்ற திட்டத்தை நடத்தி வரும் ரோட்டரி கிளப் ஒப்பி ஆப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டியுடன் இந்த மருத்துவமனையும் கைகோர்த்துள்ளது.
இந்த கூட்டிணைவின் தொடக்க விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மற்றும் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜே.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின் டாக்டர் காமாட்சியின் நினைவு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான மருத்துவர் ஆர்.பிரேம் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது ”இதய பிரச்சனையை விரைவாக கண்டுபிடித்து சரியான சிகைக்காய் அளித்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியும் . மேலும் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், இதயத்தை திறக்காமலே நுண் துளையிட்டு சிகிச்சை அளிக்க முடியும்.அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மயக்க மருந்து அளிப்பது, புதிய ரத்தம் தருவது போன்றவை தடுக்கப்படும். இதனால் குழந்தைகள் இறப்பு விகிதம் குறையும்.மெட்ராஸ் டெம்பிள் சிட்டி சங்கத்தின் மூலம் நடத்தப்படும் “பிஞ்சு இதயங்களை குணப்படுத்துவோம்” என்ற திட்டத்தின் கீழ் நிறைய குழந்தைகள் இலவச சிகிச்சையும் பெறலாம்” என்று கூறினார்.