மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், 3 அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்பு…

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டம் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் “மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தவறாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இதற்கென தனி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும், கவுன்சிலர் அல்லது எம்.எல்.ஏக்களை அழைத்து அவர்களுடன் ஆலோசித்து இருக்க வேண்டும்.ஆனால் அதிமுக ஆட்சியில் இது எதுவும் செய்யவில்லை.3 அமைச்சர்கள் ஊழல் செய்வதற்காகவே இத்திட்டம் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பேவர் பிளாக் கற்கள். ஆற்று மணலை திருடி எங்கேயும் கிடைக்காது போல கற்களை சாலையில் போட்டுள்ளனர். அதனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுற்றிவுள்ள சாலையை கெடுத்து ஊழலுக்காக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். தேவைக்கு முரணாக இத் திட்டத்தை மதுரையில் செயல்படுத்தியுள்ளனர். தொடங்கிய இத்திட்டத்தை எந்த அளவுக்கு சரி செய்ய முடியுமோ அதெல்லாம் சரி செய்து விரைவில் முடிப்போம் . மேலும், இத்திட்டத்தில் அதிகாரிகள் ஏதேனும் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.