மாணவர்களுக்குக் கொரோனா… பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது பெற்றோர்களை மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.
ஒரு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன. இல்லையெனில், கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி மீண்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனிடையே, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல்வரிடம் பள்ளி கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள் என தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.