எளியோரின் துயர் துடைக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்… கமல்ஹாசன் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுபவர், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
விஜயகாந்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.