குறைந்தது பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100-ஐக் கடந்து விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை சிறிதளவு குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் குறைக்கப்பட்டு 99 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து 93.52 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைத்திருக்கின்றன. இதன் காரணமாக, நேற்று 99.32 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை 12 காசுகளும், 93.66 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகளும் குறைந்துள்ளது.
நூறு ரூபாயைக் கடந்து விற்பனையான பெட்ரோல் விலை தற்போது சிறிதளவு குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.